செங்கல்பட்டு பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் 5 அடுக்கு பாதுகாப்பு .
மாநாடு மேடை சுற்றி மத்திய பாதுகாப்பு காவலர்கள் கண்காணிப்பு தீவிரம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வருகிறார். இதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் பாமக, அமமுகவும் கைக்கோத்துள்ளன. கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளை 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.
அதற்கான மேடைமைக்கும் பணி இன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
