சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் தைமாதம் தீமிதி திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழாவானது தை மாதம் முதல் வெள்ளி கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.பத்தாம் நாள் விழாவான தேர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கி வீதியை சுற்றி வந்து தேர் கோவிலை வந்தடைந்தது. பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.பின்னர் புற்றடி மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றடி மாரியம்மனை வழிபட்டனர்.

Exit mobile version