தவெக தலைவர் விஜயின் பரப்புரை திட்டத்தில் மாற்றம் !


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 13ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூரில் தொடங்கினார். அதன் பின்னர் செப்டம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அவர் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

முதலில் டிசம்பர் 20ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த விஜயின் சுற்றுப்பயணம், தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி, சனிக்கிழமைகளில் 18 நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 நாட்கள் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

டிசம்பர் 20ஆம் தேதி விஜய் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரப்புரை செய்ய உள்ளார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் நிறைவடைந்த பின், ஜனவரி 24ஆம் தேதி மதுரை, தேனி மாவட்டங்களில் அவர் தனது அடுத்த கட்ட பரப்புரையை தொடங்குவார்.

இறுதியாக, பிப்ரவரி 21ஆம் தேதி சென்னை நகரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்யும் வகையில் விஜயின் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version