சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு மீது வேன் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் –
சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தேனியில் இருந்து நேற்று பாதயாத்திரையாக நடந்து சென்றனர்
நேற்று அதிகாலை 4 மணி அளவில் பாதயாத்திரை திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீலையம்பட்டி பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து ஐயப்பன் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சபரிமலைக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் வேன் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இந்த விபத்தில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த குமார் (55), ராம்கி (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் நல்வாய்ப்பாக மற்றவர்கள் அனைவரும் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இந்த விபத்து சம்பந்தமாக வேலை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலபாடியூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (34) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
விபத்தில் உயிரிழந்த குமார் மற்றும் ராம்கி ஆவிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்த நிலையில் உயிரிழந்த இரண்டு ஐயப்ப பக்தர்களின் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது
கொட்டும் மழையில் சாலையில் நடந்து சென்ற இரண்டு ஐயப்ப பக்தர்கள் மீது பின்னே வந்த ஐயப்ப பக்தர்கள் சென்றவன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதிவாகி காண்போரை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
உயிரிழந்த ராம்கி சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் இவருக்கு ஜோதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர் மற்றும் குமார் என்பவர் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார் இவரின் மனைவி கல்பனா தேவி தேனி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்
சபரிமலைக்காக பாதையாக சென்ற இரு பக்தர்கள் மீது வேன் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பாதயாத்திரையாக சென்று வருவதால் அவர்களுக்கு ஒளிரும் பட்டை வடிவில் பாதுகாப்பு அம்சங்கள் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
