மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் செம்பனார்கோவில் அருகே காலகஸ்திநாதபுரத்தில் நேற்று மாலையில் சாலையில் சென்ற இனோவா கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த சுமார் நான்கு கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது ஆக்கூர் பகுதியில் இருந்து செம்பனார்கோவில் நோக்கி சென்ற இனோவா கார் காலகஸ்திநாதபுரம் கடை வீதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த நான்கு கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் நான்கு கடைகள் சேதமடைந்தது மேலும் கடை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இரு சக்கர வாகனம் சைக்கிள் நசுங்கி சேதமடைந்தது இந்த விபத்து நடைபெறும் போது கடைகளில் பொதுமக்கள் நிற்காததால் உயிர் சேதம் ஏற்படவில்லை மழை பெய்து கொண்டிருந்ததால் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு விபத்து ஏற்படுத்திய கார் செம்பனார்கோவில் பகுதியில் சேர்ந்தது என தெரியவந்துள்ளது இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை.
