மயிலாடுதுறை கிராமக்கோயிலில் உண்டியலை பெண்ணின் துணையுடன் வந்த நபர் திருடிச்செல்லும் CCTV

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோயில் வடக்கு வீதி தட்டாரத்தெருவில் பீடை அபகாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 4 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோயில் உண்டியல் திறக்கப்படாத நிலையில், நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவரின் துணையுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த பெண்ணை கோயில் வாசலில் காவலுக்கு அமர்த்திவிட்டு, சிறிது நேரம் அக்கம்பக்கத்தில் நோட்டமிட்டு, பின்னர் வண்டியில் மறைத்து எடுத்துவந்த கட்டரை பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் கம்பிகளை அறுத்து, சிறிய அளவிலான உண்டியலை அப்பெண்ணிடம் எடுத்துத்தர அப்பெண் உண்டியலை துணியில் மறைத்துக்கொண்டு, இருவரும் அங்கிருந்து வண்டியில் புறப்பட்டு செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோயில் உண்டியல் 4 மாதங்களாக திறக்கப்படாததால், அதில் சுமார் 10,000 ரூபாய் இருந்திருக்கலாம் என தெரிவித்த கோயில் நிர்வாகிகள், இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version