சிபிஐ இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒராண்டு நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு தொடர்பாக தேர்வுக்குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
சிபிஐ இயக்குநர் தேர்வு தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. ஆலோசனையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பங்கேற்றனர். புதிய சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரைத்த பெயர்களை ராகுல் காந்தி ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சிபிஐ இயக்குநர் பிரவீன் சூடின் 2 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவுபெறுகிறது.