திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வெற்றி கோப்பையுடன் ரொக்க தொகை வழங்கி பாராட்டினார்.
சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திராவிட பொங்கல் 2026 சமூக நீதிக்காண திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலின் அறிவுறுத்திருந்தார். அதன்படி திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் சமூகநீதிக்கான திருவிழா கொண்டாட்டம் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஒன்றியங்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலிடங்கள் பிடித்த அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெற்றன. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டப் போட்டிகள் தொடங்கியது. இதனை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர்பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். கபடி, வாலிபால், கோகோ, உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் விளையாடினர். விளையாட்டு நிறைவில் முதல் இடம் பிடித்த அணிகளுக்கு தலா 20000 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்ற அணிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் பரிசு தொகையுடன் வெற்றி கோப்பையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, நகர செயலாளர் வாரை பிரகாஷ், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















