விஜய்க்கு மாலை அணிவித்த கிரேன் இயந்திரத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

உங்கள் விஜய் நான் வாரேன் என்ற மக்கள் சந்திப்பின் கீழ் கடந்த 20 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருவாரூர் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது அவர் வருகிற சாலை முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் விஜய் வருகை தந்த பொழுது திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அழகிரி காலனி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக ஆள் உயர மாலையை விஜய்க்கு அனுவித்தார். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் மாவட்ட செயலாளர் மதன் ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ராஜேஷ் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் மனோ அன்பு உள்ளிட்ட நான்கு பேர் மீது திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version