Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை புறவாசல் வழிகா வந்த தேர்தல் ஆணையரிடம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும், தேர்தல் ஆணையரும், பிரதமரும் அரசபரம்பரை அல்ல என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார். போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதியேற்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழாவில் சென்னையில் இருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி வாயிலாக உறுதிமொழி வாசிக்க நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடந்த பெருந்திரள் உறுதியேற்பு நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு , மாவட்ட ஆட்சியர் சுகுமார்,

துணை மேயர் ராஜூ மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பணியை சிறப்பாக செய்த பள்ளி கல்லூரிகளுக்கு சபாநாயகர் அப்பாவு விருது வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;

மாநில கல்விக்கொள்கையின் அடிப்படையே இரு மொழி கொள்கைதான். சாமானியனும் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா காலத்திலேயே போராடி இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது பதினோராம் வகுப்பு பொது தேர்வு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது அதிலும் காலாண்டு அரையாண்டு, இறுதித் தேர்வுகள் உண்டு. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்த ஆணையிட்டுள்ளது.

அதில் தோல்வி அடையும் மாணவர்கள் குல தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். குழந்தைகள் தொழிலுக்கு செல்லக்கூடாது என்கிற தடை சட்டம் இருந்தபோதிலும் இதுபோன்று மத்திய அரசின் சட்டத்தால் குழந்தை தொழிலாளர்களை உருவாக்கும் நிலை ஏற்படும். குருகுல கல்வி பயின்றவர்கள் நேரடியாக ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நேரடியாக சேர்க்கை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 40 முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஆராய்ச்சி செய்ய உதவித்தொகை வழங்கப்படுகிறது. குருகுலத்தில் உயர் சாதியினர் மட்டுமே பயிலமுடியும், அவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். இது எந்த வகையில் சரியானது? தேர்தல் நாளன்று மாலை ஐந்து மணிக்கு மேலாக ஏழு முதல் 10 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகிறது இது குறித்து கேள்வி எழுப்பினால் தேர்தல் ஆணையம் முறையாக பதில் சொல்வதில்லை

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை கீழே இருந்தே சரி செய்ய முடிகிறது. ஒன்னால ரூபாய் evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா? இதற்காக ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி மக்களே வாக்களிக்காமல் நேரடியாக பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் முறையை செயல்படுத்துகிறார்கள்.

இதுகுறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டு சொல்கிறது. மன்னிப்பு கேட்க சொல்ல அவர்கள் அரச பரம்பரை அல்ல பாரத பிரதமர் அரசரும் அல்ல அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். புறவாசல் வழிகா வந்த தேர்தல் ஆணையரிடம் மன்னிப்பு கேட்க சொல்வது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாக இருக்கிறது. தேர்தல்கள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலேயே நடந்துள்ளது என்றார். ராஜினாம செய்த துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் காணவில்லை என்று எதிர்கட்சிகள் கேள்வி கேட்கின்றனர், ஆள்கொணர்வு மனு போடும் நிலை உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் பிரதமரும், உள்துறை அமைச்சரும்தான் பதில் கூற வேண்டும் என கூறினார்.

Exit mobile version