பஞ்சாபில் பல உயிர்களை காப்பற்றிய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு!

பஞ்சாபில் கனமழையால் பழைய கட்டடம் இடிந்து விழுந்தது. சில வினாடிகளுக்கு முன், பலரை ராணுவ வீரர்கள் காப்பாற்றி தப்பிக்க வைத்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பஞ்சாபில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பஞ்சாபில் உள்ள மாதோபூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அப்பகுதியிலிருந்த பழைய கட்டடத்தின் மேல் ஹெலிகாப்டரை சாதுர்யமாக இறக்கி உள்ளே சிக்கி இருந்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

அதன் பிறகு சில வினாடிகளில் கட்டடம் இடிந்தது. பல உயிர்களை காப்பற்றிய ராணுவ வீரர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆபத்தான நிலையில் இடிந்து விழும் சூழலில் பழைய கட்டடம் இருந்த போதிலும், ராணுவ விமானிகள் ஹெலிகாப்டரில் சென்று பல உயிர்களை காப்பாற்றினர்.

இந்த சாதனை துணிச்சலை நிரூபித்துள்ளது. தங்கள் சொந்த உயிரைப் பணயம் வைத்து, சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பாக ராணுவ வீரர்கள் மீட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல உயிர்களை காப்பற்றிய ராணுவ வீரர்களின் துணிச்சலான செயலுக்கு வாழ்த்துக்களையும், உங்களது கருத்துகளையும் கமென்ட் செய்யுங்கள் மக்களே!

Exit mobile version