திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் பலி.
திருவாரூர் அருகே அம்மையப்பன் புதுப்பாலத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நவீன் (7).
அதே பகுதி பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவரை கீரிப்பிள்ளை கடித்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 24ம் தேதி காய்ச்சலால் அவதியுற்ற நவீனை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருந்தும் சிகிச்சை பலனின்றி நவீன் இறந்தார். அவரது உடலில் வைரஸ் தொற்று இருந்ததால் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சுகாதாரத்துறையினரே அங்குள்ள இடுகாட்டில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அம்மையப்பன் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயிரிழந்த சிறுவனின் வீடு அமைந்துள்ள பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தியும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது … வீடு ஏழ்மை காரணமாக பட்டா இல்லாத இடத்தில் கதவு இல்லாத நிலையில் தங்களது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறோம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு குழந்தைகளுடன் உறங்கிய போது கீரிப்பிள்ளை குழந்தையின் காலை கடித்துள்ளது .
உடனடியாக கீரிப்பிள்ளையை அடித்து கொன்று வீசியவுடன் குழந்தையை அருகாமையில் உள்ள தனியாரிடம் சிகிச்சை மேற்கொண்டதாகவும் .
தற்போது குழந்தை மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் உடல் வலி அதிகமாகவும் தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமபட்டுள்ளது .தொடர்ந்து கடுமையான ஜுரமும் இருந்ததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த போது குழந்தையை விலங்குகள் ஏதும் கடித்ததா என கேட்டபோது கீரிப்பிள்ளை கடித்தது என தெரிவித்ததை தொடர்ந்து குழந்தையை தனிமை படுத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர் .குழந்தை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்து குழந்தைக்கு சரிவர மருத்துவம் செய்யவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.
தங்களது குழந்தை தற்போது உயிர் இழந்த நிலையில் வேறு எந்த குழந்தைகளும் இதேபோல் ரேபிஸ் நோயால் பாதிக்க கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
