சென்னை: வரும் செப்டம்பர் 7–8 தேதிகளில் அரிய ‘ரத்த நிலவு’ காட்சி தரவுள்ள சந்திர கிரகணத்தை, சென்னை உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் நேரடியாகக் காண முடியும்.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும். பூமி, சூரிய ஒளியை மறைப்பதால், சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். இதையே ‘ரத்த நிலவு’ என அழைக்கிறார்கள்.
நேர விவரம்:
கிரகணம் செப்டம்பர் 7 இரவு 8.58 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 8 அதிகாலை 2.25 மணி வரை நீடிக்கும். முழுமையான கிரகணம் இரவு 11.41 மணிக்கு நிகழும். முக்கியமாக, இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை சந்திரன் பூமியின் மைய நிழலில் முழுவதும் மூழ்கும்.
சென்னையில் எப்படி காணலாம் ?
சென்னையில், கிழக்கு திசையை நோக்கி வானத்தைப் பார்த்தாலே கிரகணத்தை கண்களால் ரசிக்கலாம். எந்த வித கருவிகளும் தேவையில்லை. ஆனால், கிரகணத்தின் ஆரம்ப கட்டமான ‘பெனும்பிரல்’ நிலையைக் காண (telescope) போன்ற கருவிகள் உதவும்.
உலகளாவிய காட்சி:
இந்த கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் பெருங்கடல், துருவப் பகுதிகளில் காணப்படும்.