தமிழக முதல்வர் ஸ்டாலினின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற ரத்த தான முகாம்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில் விழுப்புரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்  லட்சுமணன் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின்  73-வது பிறந்தநாள் மார்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திமுகவினர் முதலமைச்சரின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உற்ச்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வர்  ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திமுகவினர் ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் செய்ரவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் ரத்த தானம் அனைவரும் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ரத்தான முகாம் நடைபெற்றது. ரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்

Exit mobile version