சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரி, ஜே சி ஐ கிரீன் சிட்டி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த வகையை கண்டறிந்து ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கிய மாணவ மாணவிகளுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர் அறிவழகன் மற்றும் கல்லூரி முதல்வர் பாராட்டு சான்று வழங்கினர்.

Exit mobile version