பாஜகவின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர், எனக்கும் நல்ல நண்பர் – கே எஸ் அழகிரி

பீகாரில், 65 லட்சம் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்திலேயே மிகப்பெரிய படுகொலை என்றும், பாஜகவின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் மிக நல்லவர் தான் எனக்கும் நல்ல நண்பர் தான் இருந்து போதும், அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக அவர் சார்ந்துள்ள இயக்கத்திற்காக அவருடன் மோதுகிறோமே தவிர இது தனிப்பட்ட ரீதியிலான மோதல் அல்ல இது அன்றும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மேனாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி…..

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பை கண்டித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்சியில் இருந்து சென்னை வரை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து தொடர்பான வழக்கில் இன்று கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு மேனாள் தலைவர் கே எஸ் அழகிரி கும்பகோணத்திற்கு இன்று காலை வருகை தந்தார் முன்னதாக நீதிமன்றம் செல்லும் முன்னர் இன்று மறைந்த மேனாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நீதிமன்ற வளாக வாயில் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜூவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்தியாவில் கணினி பயன்பாடு மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு மின்னணு வளர்ந்திருப்பதற்கு காரணம் ராஜூவ் காந்தி என்றும், புகழாரம் சூட்டிய அவர், தொடர்ந்து கூறுகையில், பீகாரில் தகுதியடைய 65 லட்சம் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பிரிவினையின் போது மக்கள் கொல்லப்பட்டதை விட மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என்றும், இது மிக துயரமான விசயம் என்றும், கடந்த முறை தேர்தலில் வாக்க்களித்தும், அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பீகாரில் குடும்பத்துடன் வசித்த போதும், அவர்களுக்கு என்றும் முகவரியும் வீடு இருக்கும் போதும், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இப்படி, பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க கூடியவர்கள் என அறியப்பட்ட வாக்காளர்கள் இப்படி நீக்கப்பட்டுள்ளனர் தேர்தல் ஆணையம் நீக்கப்பட்டவர்களை சேர்க்க பிறப்பு சான்றிதழ் கோருகிறது 60 வயதை கடந்தவர்களுக்கும், கிராமப்புறங்களில் பிறந்தவர்களுக்கும் அன்றைய காலகட்டங்களில் பிறப்பு பதிவு என்பது இருக்காது என்றும் அழகிரி வேதனையுடன் குறிப்பிட்டதுடன் எனவே தான் ராகுல் காந்தியும், இந்தியா கூட்டணி இந்த பிரச்சனையை கையில் எடுத்து போராடி வருகிறது இது அரசியல் பிரச்சனையல்ல, இந்தியாவின் ஜனநாயக பிரச்சனை என்றும் தெளிவுபடுத்திய அவர்,

குடியரசு துணை தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சி பி ராதாகிருஷ்ணன் நல்லவராக இருந்தாலும், என்னுடைய நண்பராக இருந்த போதும் நாங்கள் கொள்கை ரீதியில் எதிர் எதிர் அணியில் இருப்பதால், இந்தியா கூட்டணி அவரை எதிர்த்தே வாக்களிக்கும், இது கொள்கை ரீதியிலான, அரசியல் ரீதியிலான மோதலே தவிர தனிப்பட்ட மோதல் இல்லை என்றும் அழகிரி மேலும் தெரிவித்தார் பேட்டியின் போது அவருடன் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி ஆர் லோகநாதன் மற்றும் மாநகர தலைவர் மிர்சாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது

Exit mobile version