தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜ யாரையும் எதிரி கட்சியாகக் கருதுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு மோசமான முறையில் செயல்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனைக்கு அரசே ஆதரவாக உள்ளது. இந்த அரசை மாற்ற அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ஒன்றிணைந்து ஆட்சிமாற்றத்திற்கு துணை நிற்க வேண்டும்” என்றார்.
மேலும், “பாஜக யாரையும் எதிரி கட்சியாக அல்ல, எதிர்க்கட்சியாகவே பார்க்கிறது. தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். தற்போது செங்கோட்டையன் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்; அது உள்கட்சி பிரச்சனை என்பதால் அதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஓ.பி.எஸ். அவர்களுடன் நான் பேசியுள்ளேன்” எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.