வேலூர் மாவட்டம் வேலப்பாடி என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ள சார்பானாமேடு என்ற பகுதியில் அமைந்துள்ள பகவதி மலையில் சமணத்துறவிகள் வாழ்ந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
சமணர்களால் அழைக்கப்பட்ட பகவான் மலையில் அமைந்துள்ளது பகவதி அம்மன் திருக்கோயில். செங்குத்தான பாறைகளில் வெட்டப்பட்ட படிக்கட்டிகள் மூலம் அம்மனை தரிசிக்கலாம். மேலும் ஆதிநாதரின் பெரிய பாதங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
பகவதி மலையின் உச்சியில் 8க்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னரதேவன் கல்வெட்டுகள். சுpத்தர் பீடம், சிவலிங்கமும் நந்தியும். குகையில் பகவதி அம்மன் கோயில் இங்கு கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன.
இதன் அருகில் சுனை நீர் நிலைகள் உள்ளன. மேலும் 3 தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் முதல் கல்வெட்டில் “ ள மகன் ஈதி பயளிய் என்றும் 2வது கல்வெட்டில் “மாறன் மழவன் என்றும் 3வது கல்வெட்டில் தி என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சமண கற்படுக்கைகள் மிகவும் கரடு முரடாக இருப்பதாலும், அதிலுள்ள எழுத்துக்கள் மிகவும் மெல்லியதாக காணப்படுவதால் மாவிட்டாலும் நம் வெற்று கண்ணால் காண்பதற்கு இயலாது.
பகவதி மலையின் மேற்புறம் செல்வதற்கான செங்குத்தான பாறைகள் வெட்டப்பட்ட படிகளை ஏறி கடந்து சென்று வலது புறம் சுமார் 20 அடிகள் கடந்த பின் ஒரு பெரிய இயற்கையான குகை பகுதி அமைந்துள்ளது.
ஆதனுள்ளே உளள மிகப்பெரிய பாறையில் 3ம் கிரு~;ணனின் 26வது ஆட்சி காலத்தில் 11வரி கல்வெட்டு தமிழில் தெளிவாக காணப்படுகிறது. மேலும் சுணை அருகிலும் சில கன்னட மொழி கல்வெட்டுகள் உள்ளன.
2வது படையெடுப்பு தக்கோலப் போர் நடைபெற்றது. இப்போரில் பராந்தக சோழனின் மூத்த மகள் இராசதித்தன் வீரமரணமடைந்தார். பின்னர் போரில் வென்ற கன்னர தேவன் எனப்படும் 3ம் கிரு~;ணன் தொண்டை மண்டலம் முழுவதையும் வென்றான்.
இதன்மூலம் இப்பகுதியில் கன்னர தேவனின் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.