வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் வங்கி பணிகள் பாதிப்பு 

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், வங்கி பணிகள் பாதிப்பு :-

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது. இதன் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 22 பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை பாரதி ஸ்டேட் வங்கி கிளை முன்பு நூற்றுக்கு மேற்பட்ட வங்கி அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version