மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்த கால் நடுவிழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் துவக்கமாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

பதினோராம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கருவறை கட்டப்பட்டதால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று அழைக்கப்பட்டு, அச்சுதப்ப நாயக்கர் விஜயராகவ நாயக்கர் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தி கட்டப்பட்டு நாயக்கர் கால கட்டடக் கலைக்கு உதாரணமாக கோவிலின் முன்பு எங்குமே இல்லாத வகையில் 54 அடி உயர ஒற்றை கல்கொடி மரத்தை கொண்டு துவங்குகிறது மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் பிரம்மாண்டம். 16 கோபுரங்கள், 24 விமானங்கள் ஆயிரங்கால் மண்டபம் என பல்வேறு கட்டட சிறப்புகளை கொண்ட ராஜகோபாலசாமி கோவிலின் யானை செங்கமலம் தனது பாப் கட்டிங் தலைமுடியால் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலின் திருப்பணி வேலைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற வந்தது. நிறைவடையும் தருவாயில் இப்பணிகள் விறுவிறுப்பாக இறுதி நிலையை எட்டி உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி கும்பாபிஷேகம் அறிவிக்கப்பட்டு அதற்கான பந்தல்கால் நடும் பணி நடைபெற்றது. தாயார் தேரோடும் பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு பந்தல் கால்கள் நடப்பட்டது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருடா இளவரசன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Exit mobile version