உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் ஆழித்தேரோட்டம் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி,தைபூசத்தை ஒட்டி பங்குனி உத்திர ஆழித்தேரோட்டத்திற்கு பந்தகால் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது
வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி ஆலயத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆழித்தேரோட்ட விழா மார்ச் 6ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி,பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா மார்ச் மாதம் 29 ஆம்தேதி் நடைபெறுகிறது.
இதையொட்டி தைபூசத்தில் பந்தகால் நடும் விழா நடைப்பெறும்.
இதையொட்டி இன்று நாயன்மார்களில் முக்கியவரான திருஞானசம்பந்தர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் சண்டிகேஸ்வர் சன்னதி மற்றும் ஆயிரங்கால் மண்டபம் வினாயகர் சன்னதிகளில் பங்குனி உத்திர விழாவிற்கு பந்தகால் நடப்பட்டது.
தொடர்ந்து ஆழித்தேரடியில் ஐந்து தேர்களுக்கான பந்தகால் வைக்கப்பட்டு அரிசிமாவு , திரவியம்,மஞ்சள்,பால் போன்ற திரவியங்களால் அபிஷேகங்கள் நடைப்பெற்றன.
பின்னர் தேர் பந்தகாலுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிப்பட்டனர்.
