விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது ரயில்வே ஊழியர்கள் இணைந்து இருப்புப் பாதைக்கு பூஜைகள் செய்து, பொறி, பொங்கல், சுண்டல் உள்ளிட்டவற்றை வைத்து படையல் இட்டனர். மேலும், ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் அலுவலகப் பொருட்களும் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.
ஊழியர்கள் சக ஊழியர்களுக்கு பொங்கல், பொரி உள்ளிட்ட நைவேதியங்களை வழங்கி, மகிழ்ச்சியுடன் ஆயுத பூஜையை கொண்டாடினர். இதில் உயர் அதிகாரி சுந்தர்ராஜன்,JE. ஹரிஷ், பாண்டிச்சேரி முதுமை பொறியாளர் சிவசக்தி பாலு மற்றும் மேஸ்திரிகள் ஹரிகரன், பரமசிவம் ராமமூர்த்தி ஊழியர்கள் கௌதமி, செல்வி, சுமதி, லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
