என் வாக்கு விற்பனைக்கு அல்ல,தமிழக சட்டமன்ற தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழுப்புரத்தில் அரசு பேருந்துகள், வீட்டு உபயோக சிலிண்டர்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிற நிலையில் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், வாக்களித்து ஜனநாயகத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி,என் வாக்கு விற்பனைக்கு அல்ல என உறுதிமொழி ஏற்றுக்கொள்வோம் என்பன வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல, நூறு சதவீதம் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், வாக்களித்து ஜனநாயகத்தை காப்போம் என வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கரினை ஒட்டி துவங்கிவைத்தார்.

















