திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தற்பொழுது மழைக்காலம் என்பதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முன்னதாக மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேலூர் மாவட்டத்திலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக வரவழைக்கப்பட்ட பெரிய எல் இ டி திரை கொண்ட பிரச்சார வாகனம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் சுற்றி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திர வல்லி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் வாகனத்தை பின் தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் வரை பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் நிர்வாக பொறியாளர் நித்தியானந்தன், உதவி நிர்வாக பொறியாளர் தேசிங்கு ராஜா,
இளநிலை பொறியாளர் பிரியதர்ஷினி, துணை நிலநீர் வல்லுனர் மணிமேகலை ஜான்சன், உதவி நிலநீர் வலுநர் பரிதிமாற் கலைஞன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
