மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மாவட்ட மருத்துவமனையில் உலக பாதுகாப்பு கலைப்புதினம் 2025ஐ முன்னிட்டு மாவட்ட
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக பாதுகாப்பான கருக்கலைப்பு சட்டபூர்வமான கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை மருத்துவர் மருதவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் பானுமதி, மாவட்ட குடும்ப நலம் துணை இயக்குனர் டாக்டர் செல்வி ஆகியோர் பங்கேற்றனர். இதில் தேவையற்ற கருத்தரிப்பபை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தாய்மார்களுக்கு விளக்கம் அளித்தனர். கருவுற்ற பெண்கள் கருக்கலைப்பு செய்ய அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சட்டபூர்வ மருத்துவரிடம் ஆலோசனைகள் பெற வேண்டும், குழந்தை திருமணத்தை தடுத்தல் குறித்தும், சிறுமிகள் தவறான பாதைக்கு செல்லாமல் பெற்றோர்கள் கண்காணித்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறுமிகள் முன் பின் தெரியாத ஆண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 
			















