ரெப்கோ வங்கியின் பர்மாவில் இருந்து தாயகம் திருந்திய மக்களுக்கான வங்கி சலுகைகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வியாசர்பாடியில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை என்ற பெயரில் பர்மாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் அறக்கட்டளை உள்ளது இந்த அறக்கட்டளை ரெப்கோ வங்கியின் துணையுடன் செயல்பட்டு வருகிறது

அத்துடன் ரெப்கோ வங்கியில் பர்மாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த மக்கள் தாயகம்திரும்பியோர் என்ற பெயரில் பல சலுகைகள் ரெப்கோ வங்கி சார்பில்வளங்கப்படுகிறது இதில் கணவனை இளந்தோர்கானஒற்றைப் பெற்றோர்நலதிட்டம் கல்வி திட்டம் என பல்வேறு திட்டங்கள் இந்த வங்கி மூலமாக அந்த மக்களுக்கு அளிக்கப்பட்டு கடன் உதவிகளும் அளிக்கப்படுகின்றன இதனை அந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று சென்னை வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் சமுதாய நலக் கூடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்

பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் கல்வி உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

இந்த நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கியின் தலைவர் E. சந்தானம் மற்றும் ரெப்கோ வங்கியில் வீட்டுக் கடன் திட்ட இயக்குனர் சி .தங்கராஜ் மற்றும் தாயகம் திரும்பியோ நல அறக்கட்டளை நிர்வாகி திருநாவுக்கரசு மற்றும்ரெப்கோ வங்கியின் அதிகாரிகள் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய பொதுமக்கள் என சுமார் 700 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Exit mobile version