உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகளை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம பொதுமக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர்….
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சாதி சங்க கொடியுடன் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள் பட்டியல் சமூக மக்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு பட்டியலின மக்களின் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்கள் கொடுத்த புகாரின் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் சுகத்தை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் இதில் கிராம பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.