வைத்தீஸ்வரன் கோயிலில், பத்தாவது ஆண்டாக கிராம மக்கள் 2000 பேருக்கு, டோக்கன்கள் மூலம் குளிர்கால கம்பளி போர்வை வழங்கிய சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஊரில், தனியார் உணவகம் மற்றும் விடுதியை வைத்து நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் தனது குடும்பத்தினர் உதவியுடன், கடந்த 10 ஆண்டுகளாக, குளிர்காலத்தில் கம்பளி போர்வை வழங்கி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு வைத்தீஸ்வரன் கோவிலை சுற்றி இருக்கும் கிராமங்களில் ஏழை எளியவர்கள் 2000 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு 2000 டோக்கன்கள் வழங்கி, கம்பளிப் போர்வை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. டோக்கன்களுடன் விடுதிக்கு வந்த கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பளி போர்வை மற்றும் மதிய உணவு பெற்றுச் சென்றனர். பத்து ஆண்டுகளாக கடமை போல் இதனை செய்து வரும் சமூக ஆர்வலர் ஜெயக்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
