கிறிஸ்மஸ் விழாவையொட்டி மயிலாடுதுறையில் ஏசுகிறிஸ்துவின் உருவத்தை சூரிய ஒளியைக் கொண்டு மரப்பலகையில் தத்ரூபமாக வரைந்து அசத்திய ஆசியாவின் முதல் சன்லைட் வுட் பர்னிங் ஆர்ட்டிஸ்ட்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தோப்புத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலையாக விளங்கும் சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற கலையை ஆசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவில் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளாக வரைந்து அசத்தி வருகிறார். மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரிய கதிர்களை ஓரிடத்தில் குவித்து அதில் தோன்றும் நெருப்பு மூலம் ஓவியம் வரைவது பர்னிங் வுட் ஆர்ட் ஆகும். இளைஞர் விக்னேஷ் ஏற்கெனவே பல்வேறு திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் ஆளுமைகள், கடவுள் திருவுருவங்கள், அரசியல் பிரபலங்களின் நூற்றுக்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து பிரபலமானவர். இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏசு கிறிஸ்துவின் உருவத்தை சன்லைட் வுட் பர்னிங் முறையில் வரைந்து அசத்தியுள்ளார். பிரபஞ்ச கடவுள் என்ற கான்செப்டில் ஏசுபிரான் அண்டவெளியில் இருந்து பூமியை ஆசிர்வதிப்பதைப் போன்ற இந்த ஓவியத்தை சுமார் ஒன்றரை மாத உழைப்பில் உருவாக்கியுள்ள விக்னேஷ் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிர்ந்துள்ளார்.
