8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், UAE, ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் B-வில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மறக்க முடியாத இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, ஆகஸ்ட் 19 அல்லது 20-ஆம் தேதி அணியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. வீரர்களின் மருத்துவ அறிக்கைகளை ‘சிஓஇ’ விளையாட்டு அறிவியல் பிரிவு அனுப்பும் நேரத்தைப் பொறுத்தே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
தற்போது அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்றோர் முதல் 5 இடங்களில் வலுவான நிலையில் உள்ளனர். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன், முதல் தேர்வு விக்கெட் கீப்பராக கருதப்படுகிறார். இரண்டாவது கீப்பர் இடத்திற்காக ஜிதேஷ் சர்மா – துருவ் ஜூரல் இடையே போட்டி நிலவுகிறது.
ஆல்-ரௌண்டராக ஹர்திக் பாண்ட்யாவுடன், இங்கிலாந்துக்கு எதிராக பிரபலமான சிவம் துபேவும் அணியில் சேர வாய்ப்பு உள்ளது. சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல் – வாஷிங்டன் சுந்தர் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து பிரிவில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் , திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஜிதேஷ் சர்மா / துருவ் ஜூரல்