திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நடந்த ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூர்த்தி, தீர்த்தம் ஆகியவை மூன்றாக அமைந்துள்ளது. மேலும் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாகும். கோவிலில் அமைந்துள்ளது. ஞானசபையில் நடராஜ பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். திருவாதிரை நாளான இன்று சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள மாபொடி, மஞ்சப்பொடி,தேன், பஞ்சாமிர்தம்,பழச்சாறு, இளநீர், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியப்ப கூடிய கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தால் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜ பெருமாள் புறப்பாடு பின் திருக்கோவில் உட்பிரகாரவீதி விழா நடைபெற்றது.சிவகாமி சமேத நடராஜ வீர நடனம் ஆடி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினர் இதனை அடுத்து நடராஜபெருமான் ஞான சபை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்
