விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹமான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார் – மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

நாட்டின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் மூவர்ண கொடியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து காவல்துறையின் அனைவருக்கும் மரியாதை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளில் குடும்பத்தினரை கௌரவித்தார். சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் அணிவித்தார். இந்நிகழ்வில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றும் வழங்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, டாக்டர் லட்சுமணன், சிவகுமார் விழுப்புரம் சரக டி ஐ ஜி அருளரசு ,எஸ்பி சாய் பிரணீத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது

Exit mobile version