மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் 2025 மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது.
இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒப்புவித்தல் போட்டி, கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், ஆத்திச்சூடி ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளிலும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைபயிலும் மாணவர்கள் பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தேசபக்தி பாடல்கள், தனிநபர் நடிப்பு, மெல்லிசை பாடல், குழு நடனம், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் ஆகிய போட்டிகளிலும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப் போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, குமாரவேல், வட்டார கல்வி அலுவலர் உமா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர். ஒன்றிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 38 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்த 180 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
