பொதுத் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஏ எஸ் பி. ஷுபம் திமான் பரிசு வழங்கினார்
திருத்தணி, ஜூன்.8.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி ஏ எஸ் பி ஷுபம் திவான் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை பவள விழா முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை அறிவுசர் மையம் மற்றும் சமூக மேம்பாட்டு மையம் சார்பில் பாராட்டு மற்றும் அங்கீகார விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மாலை நடைபெற்றது. பொதட்டூர் பேட்டை சேர்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிவரும் நபர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில். திருத்தணி ஏஎஸ்பி.ஷூபம் திமான், சின்னத்திரை நடிகை காயத்ரி, ஊடகவியலாளர் சிவப்பிரியன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர் மற்றும் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று மாணவ மாணவியரை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவள விழா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் செய்யப்பட்டது.
