தாம்பரம்:
அரும்பாக்கம் பகுதியில் கடந்த 16ம் தேதி நடந்த சம்பவத்தில், மழைநீர் தேங்கி இருந்த சாலையில் நடந்து சென்ற சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி விழுந்தார்.
அப்போது அதே வழியாக சென்ற இளைஞர் கண்ணன், தன்னுடைய உயிரைப் பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்டு, அந்த சிறுவனை உயிருடன் காப்பாற்றினார். அவரது தைரியமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணனைக் கௌரவிக்கும் விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சங்கத் தலைவர் வி. சந்தானம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி பங்கேற்று, இளைஞர் கண்ணனை பாராட்டினார் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.