நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘ஜானகி vs. ஸ்டேட் ஆஃப் கேரளா’ திரைப்படம் இன்று மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அனுபமா பரமேஸ்வரன் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள மற்றொரு திரைப்படம் ‘பரதா’. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த திரைப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘சினிமா பண்டி’ மற்றும் ‘சுபம்’ போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பரதா’ திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் அனுபமாவுடன் சேர்ந்து சங்கீதா க்ரிஷ் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஆனந்த மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.