திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

திருவாரூரில் ஏழாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்த போது கைது செய்யப்பட்ட சுரேஷ் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாதால் பரபரப்பு

திருவாரூர் அருகே கீழகாவாதுகுடி பகுதியை சேர்ந்த பாரதிதாசன், இவர் வீடு கட்ட அனுமதி பெறுவற்காக அங்கிருந்த திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனை அணுகியுள்ளார். அவர், அனுமதி தர லஞ்சமாக ரூ. 7 ஆயிரம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதிதாசன் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை பாரதிதாசன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன்( 55 )மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ் (51) ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது மன உளைச்சலில் இருந்த உதவியாளர் சுரேஷ் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார் அப்பொழுது அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் மற்றும் சக ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் .

இதன் தொடர்ச்சியாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கி பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனை அழைத்து வந்த போது அங்கிருந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version