தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா 1000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவர் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பதினொன்றாம் நாள் திருவிழாவான இன்று பால்குட திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பொய்யாத பிள்ளையார் கோவிலில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து ரேணுகாதேவி அம்மன் கோயிலை அடைந்தனர் ரேணுகா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்கள் எடுத்து வந்த பாலினக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் தரங்கம்பாடி தலைமை மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Exit mobile version