மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை பிரச்சாரத்தில் கோபம். நான் 15 பத்தி பேசுறேன் நீ பத்தரையை காமிக்கிற மாற மாட்டீங்களா டா? நீங்க என்று காட்டம். நிர்வாகிகள் கொண்டு வந்த தலைகிரீடத்தை ஏற்காமல் வாங்கி கீழே போட்டதால் நிர்வாகிகள் ஏமாற்றம். தலை கிரீடத்தை தலைக்கு மேலே பிடித்து நின்ற நிர்வாகிகள். வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாக நடனமாடியும் சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியும் வரவேற்றது பார்வையாளர்களை கவர்ந்தது:-
மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு உற்சாக வரவேற்பு. இளைஞர்களின் உற்சாக நடனமும், சிறுவர்களின் சிலம்பாட்டமும் பார்வையாளர்களை கவர்ந்தது.
மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் பிரச்சாரப் பரப்புரையில் ஈடுபட்டார். பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் தப்பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர்கள் சிறுவர்கள் சிலம்பாட்டம், நடனத்துடன் பாமக தலைவரை வரவேற்றனர். இளைஞர்களின் நடனம் கலை கட்டியது. கால்டெக்ஸ் பகுதியில் நடை பயணத்தை துவங்கி பட்டமங்கல தெரு வழியாக சின்ன கடைவீதி வந்தடைந்தார். அங்கு மகளிர் அணியினர் பொதுக்கூட்ட மேடையில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றிய பின்னர் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மாலை தலை கிரீடம் செங்கோல் வழங்கி கௌரவித்தனர். மாலை அணிவித்த போது தலை கிரீடத்தை ஏற்காத அன்புமணி ராமதாஸ் தலைகீரியிடம் அனுபவிக்க வந்தபோது மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி கையில் இருந்த தலை கிரீடத்தை வாங்கி கீழே போட்டார்.
தொடர்ந்து இரண்டாவது மாலையை அன்புமணிக்கு அணிவித்த போது மற்றொரு கிரீடத்தை நிர்வாகிகள் மாலைக்கு மேலே தூக்கிப்பிடித்தபடி நின்றனர். தலைவர் அன்புமணி ராமதாஸ் தலையில் தொப்பி அணிந்திருந்த நிலையில் நிர்வாகிகள் கொண்டு வந்த கிரீடத்தை ஏற்க மறுத்து தலையில் அணியாதது நிர்வாகிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அன்புமணி ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 13 சதவீதம்தான் நிறைவேற்றியுள்ளனர் என்று அன்புமணி பேசிய போது தொண்டர்கள் செல்போனில் பத்தரை சதவீதம் என்று தூக்கி காண்பித்ததை பார்த்த அன்புமணி ராமதாஸ் கோவமுற்று நான் 15 ஐ பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் நீ பத்தரையை காண்பிக்கிறாய் பத்தரையை கீழே போடுடா என்று கடுகடுத்தார்
