சென்னை பெரம்பூர் பட்டேல் தெருவில் கடந்த சில நாட்களாக மழைநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது பணிக்காக பட்டேல் தெருவில் பள்ளம் தோண்டும் பொழுது புங்கை மரம் வேரோடு சாய்ந்தது இதனை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக அருகில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இப்பள்ளியின் மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் இருந்ததால் எந்தவித உயிர் சேதமோ அசம்பாவிதமோ நடைபெறவில்லை பள்ளியின் நுழைவாயில் பகுதியில் சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
