ஆம்வே இந்தியா ‘நியூட்ரிலைட் வைட்டமின் D பிளஸ் போரான்’ அறிமுகம்

வலிமையான எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த நலனுக்குத் தேவையான வைட்டமின் D, போரான், K2 உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்ட ‘நியூட்ரிலைட் வைட்டமின் D பிளஸ் போரான்’ ஊட்டச்சத்து மாத்திரைகளை ஆம்வே இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய வேகமான வாழ்க்கைமுறை, போதிய சூரிய ஒளி கிடைக்காமல் இருப்பது, உணவில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றால் இந்தியாவில் வைட்டமின் D பற்றாக்குறை கவலைக்குரிய அளவில் அதிகரித்து வருகிறது. ஆய்வுகள் படி இந்தியர்களில் சுமார் 80% பேருக்கு வைட்டமின் D போதிய அளவில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

அறிமுக விழாவில் ஆம்வே நிர்வாக இயக்குநர் ரஜ்னீஷ் சோப்ரா கூறியது: “மாறிவரும் வாழ்க்கை முறைகள், சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பது ஆகிய காரணங்களால் வைட்டமின் D பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இது காலப்போக்கில் எலும்புகள் பலவீனமாவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கிறது. மக்களின் நல்வாழ்வு இலக்குகளுக்கு துணையாக அறிவியல் ஆதாரமிக்க தயாரிப்புகளை உருவாக்குவது ஆம்வேயின் நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.

ஆம்வே இந்தியாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அம்ரிதா அஸ்ரானி கூறியது: “எலும்பு அடர்த்தி, கட்டமைப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை வலிமைப்படுத்த இந்த மாத்திரை அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நியூட்ரிலைட்டின் 90 ஆண்டுகளுக்கும் மேலான ஊட்டச்சத்து நிபுணத்துவத்தை அடிப்படையாக கொண்ட தயாரிப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

Exit mobile version