கட்சியை பிடிப்பேன்.. சொன்ன செங்கோட்டையன்.. 1 நிமிஷம் கூட தாக்கு பிடிக்க மாட்டீங்க.. சீறிய அமித் ஷா ?

அதிமுக உள்கட்சி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் வெளியிட்ட வீடியோவில், செங்கோட்டையன் அமித் ஷாவிடம் “என்னால் அதிமுகவை நன்றாக வழிநடத்த முடியும். நான் எடப்பாடியை விட சிறப்பாக கட்சியை நடத்துவேன். எடப்பாடிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு அதிகம். அதனால் நான் கட்சியை பிடித்துக் கொள்வேன்” என தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்கு அமித் ஷா கடும் அதிருப்தியுடன், “உங்களால் ஒரு நிமிஷமும் கட்சியை நடத்த முடியாது. உங்களையும், உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் (ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்) எனக்கு நன்றாகத் தெரியும். எடப்பாடியின் பலமும் எனக்குத் தெரியும்” என பதிலளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பை பாஜக தேசிய செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் தமிழகத் தலைவர் அண்ணாமலை இணைந்து ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற கோஷத்தை முன்னிறுத்த பாஜக முயற்சி செய்த நிலையில், செங்கோட்டையன் எதிர்பாராத முறையில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது உடனடி முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பாஜக ஆதரவு பெற்ற செங்கோட்டையன் நடவடிக்கையால், அதிமுக தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “2016க்கு பின் தொடர்ந்து பல தேர்தல்களில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 2024ல் குறைந்தது 30 இடங்களில் வெற்றிபெற்றிருப்போம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற அடிப்படையில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடியிடம் சொன்னேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. தேர்தல் நெருங்குகிறது, அதனால் விரைவில் ஒன்றிணைவது அவசியம்” என வலியுறுத்தினார்.

Exit mobile version