புதுடில்லி : “உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா” என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் நடைபெற்ற ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்த விவாதத்தில் பங்கேற்ற கனிமொழி, “தேசபக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைவாக இல்லாமல் இருக்கிறார்கள். ஆப்பரேஷன் சிந்தூருக்கு பிறகு, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான பேரணி நடத்தப்பட்டது” என குறிப்பிட்டார்.
மேலும், “ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் தமிழர்களின் பெருமையை பா.ஜ.க. மீண்டும் கண்டுபிடிக்கிறது. பயங்கரவாத தாக்குதலைத் தடுக்க உங்கள் அரசாங்கம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்கிறீர்களா? பயங்கரவாதத்தால் வெறும் ஒருவர் மட்டும் அல்ல, அவரது குடும்பத்தினரின் வாழ்வே பாதிக்கப்படுகிறது. கடந்த தாக்குதல்களில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா ?
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தடுக்க முடியாதது எப்படி ?” என கேட்ட கேள்விகள் மூலம் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.