அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதான ப்ரியானா லாஃபர்ட்டி என்ற பெண், உலகையே அதிர்ச்சிக்கும் வகையில் மரணம் என அறிவிக்கப்பட்ட 8 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் பிழைத்துள்ள அதிசய நிகழ்வு ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரியானா, உயிருக்கு ஆபத்தான அரிய நரம்பியல் கோளாறு ‘மயோக்ளோனஸ் டிஸ்டோனியா’யால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு கட்டத்தில், 8 நிமிடங்களுக்கு எந்தவிதமான இதய துடிப்பு, மூச்சு மற்றும் மூளை செயல்பாடுகளும் இல்லாமல் போன நிலையில், மருத்தவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஆனால் அதற்குப் பிறகு, திடீரென உயிர் திரும்பிய ப்ரியானா, மருத்துவ உலகையே அதிர்ச்சிக்கும் வகையில் மீண்டுள்ளார். இதற்கு காரணமாக, அவரது நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்பட்ட தற்காலிக நிலைதானென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்பது ஒரு அரிய நரம்பியல் கோளாறு. இது தசை கட்டுப்பாடுகளைத் தாறுமாறாக பாதித்து, கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் மேல் மூட்டுகளில் தன்னிச்சையான அசைவுகளை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு இல்லையென்றாலும், வாய்வழி மருந்துகள், பியூசர் சிகிச்சைகள் மற்றும் போடுலினம் நியூரோடாக்சின் ஊசிகள் போன்றவை அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன.
இந்த அதிசய அனுபவம் குறித்து ப்ரியானா கூறுகையில் :
“மரணம் என்பது வெறும் மாயைதான். ஆன்மா என்ற ஒன்று ஒருபோதும் இறக்காது. நானும் என் உணர்வுகளும் முழுமையாக இருந்தோம். ஆனால் என் உடலை இயக்க முடியவில்லை. உடலிலிருந்து பிரிக்கப்பட்ட உணர்வை கொண்டேன். ஆனால் அது பயமுறுத்துவதாக இல்லாது, ஏதோ ஒருவித அமைதி மற்றும் விழிப்புணர்வாகவே இருந்தது,” என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், நரம்பியல் மருத்துவத்தில் புதிய சிந்தனைகளையும், ஆன்மீக உலகில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.