திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் (எஸ்.ஐ.ஆர்) வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. வட்டாட்சியரிடம் வாக்குவாதம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள 1 முதல் 4 வார்டுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இந்த வார்டுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் விடுபட்டுள்ளதாகவும். சம்பந்தப்பட்ட பி எல் ஓவிடம் இது தொடர்பாக கேட்டதற்கு வயதைக் காரணம் காட்டி விடுபட்டுள்ளதாக தெரிவித்தாகவும். அதனைத் தொடர்ந்து உடனடியாக சீர்காழி வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்தாகவும். தகவலை அறிந்த வட்டாட்சியர் திருமுல்லைவாசல் கிராமத்திற்கு சென்றுள்ளார் அப்பொழுது வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் வாக்குகள் மட்டும் விடுபட்டதற்கான காரணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்று முதல் நான்கு வார்டுகளில் இருந்தவர்கள் வேறு வார்டிற்க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட வார்டுகளில் உள்ள சிறுபான்மையினர் அதிக அளவில் விடுபட்டுள்ளதால் உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version