காவல்துறை மாநகராட்சி நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை என அனைத்து துறைகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
சென்னை பெருநகர மாநகராட்சியின் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் அதிமுக மாமன்ற உறுப்பினர் இ சேட்டு இவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது வெளிநடப்பு செய்து செய்தியாளர் சந்தித்தார் அப்பொழுது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்தியாளர்களையும் சந்தித்தார் அதன் பின்பு மண்டல கூட்டத்திலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் இந்நிலையில் தற்பொழுது பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்
மாமன்ற உறுப்பினர் ஈ சேட்டு வெளியிட்டுள்ள வீடியோவில் மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் எந்தவித அதிகாரிகளும் பங்கேற்பதில்லை மண்டல அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாமண்ட உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வதாகவும் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை நாங்கள் யாரிடம் புகார் அளிப்பது நாங்கள் அளிக்கும் புகாரை அதிகாரிகள் காதுக்கு கொண்டு சென்றால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக பொதுப்பணித்துறை வருவாய்த்துறை காவல்துறை நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் அவ்வாறு பங்கேற்கும் பட்சத்தில் நாங்கள் அளிக்கும் புகாரை பெற்று அதற்கான தீர்வுகள் காண முடியும் ஆனால் எந்த அதிகாரியும் கலந்து கொள்வதில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்
தனது பகுதியில் மழைநீர் வடிகால் பணியை முடிவுற்ற அதற்கான வடிகால் இரும்புகள் அமைக்கப்பட்டுள்ளன அவைகளை சமூக விரோதிகள் திருடி செல்வதாகவும் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை பல்வேறு முறைகேடுகள் தன் பகுதியில் நடைபெறுகிறது எந்தத் துறைக்கு புகார் அளித்தாலும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை ஆன்லைன் புகாருக்கும் நடவடிக்கை எடுப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டின் முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த வீடியோ தற்பொழுது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
