13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

சென்னை : 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டில் அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவலின்படி, கோடம்பாக்கம் ஸ்ரீ எனப்படும் ஸ்ரீகண்டன், ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என கூறப்படுகிறது. இவர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தி.நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆதரவற்ற சிறுமி ஒருவர் தன் அத்தையின் வீட்டில் தங்கியிருந்தபோது, கோடம்பாக்கம் ஸ்ரீ அவரை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகும், தற்போது அந்த சிறுமி புகார் அளித்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், அந்த சிறுமியின் அத்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை மிரட்டுவதற்காக அவரது வீடியோவை மொபைலில் பதிவு செய்ததாகவும், அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கோடம்பாக்கம் ஸ்ரீ மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 5 மற்றும் 6-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், வரும் 28 ஆம் தேதி வரை சிறை வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version