கள்ள சந்தையில் மது அமோக விற்பனை

சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர் வீட்டில் காரைக்கால் மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசு மதுபான கடையில் இருந்து மொத்தமாக வாங்கப்பட்ட மதுபானங்கள் 24 மணி நேரமும் விற்கப்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் இருந்து சேகர் என்பவர் வீட்டில் மதுபானம் படு ஜோராக விற்கப்பட்டு வருகிறது. சேகர் என்பவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் அதனைக் காரணம் காட்டி மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும். பலமுறை அவரை காவல்துறையினர் கைது செய்தும் தொடர்ந்து இந்த மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தொடர்பாக காவல்துறையினர் ஊறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version