மயிலாடுதுறை அருகே கள்ளிக்காடு கிராமத்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கள்ளிக்காடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர் லிங்கமானது சாளகிராம கல்லினால் ஆனது. அகத்திய முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 09 ஆம் தேதி முதல் கால யாகசால பூஜை தொடங்கி நடைபெற்ற நிலையில் இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூரணாஹூதி செய்விக்கபட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத பரிவார தெய்வங்களாக ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நல்லகுரும்ப ஐயனார், ஸ்ரீ பிடாரி அம்மன், பஜனை மடம் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
