திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி உத்திர திருவிழாவில் ஐராவத யானை வாகனம்” ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சபூத தளங்களில் பூமிக்குரிய தலமாக விளங்குவதும்.. சர்வ தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குவதுமான அருள்மிகு தியாகராஜசுவாமி் ஆலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த 6ஆம்தேதி் கொடி் ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் விழாவில்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்..
அதன்படி இன்று அருள்மிகு சந்திரசேகரர் சுவாமி ஐராவத யானையின் மீது எழுந்தருள செய்யப்பட்டு சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
பங்குனி உத்திரப் பெறுவிழாவின் 21 வது நாளான இன்று அருள்மிகு வினாயகர்,சுப்ரமணியர்,சண்டிகேஸ்வரர் மற்றும் தருனேந்திரசேகரி சமேத சந்திரசேகரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு..
வினாயகர.,சுப்ரமணியர்,சண்டிகேஸ்வர்ஆகிய பரிவாரசுவாமிகளுடன் ஐராவத யானை வாகனத்தில் ச இருந்த சந்திரசேகர்ர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
